ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே குடும்ப தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவர் மனைவியைப் பிரிந்து குழந்தை மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த இளங்கோவன் குழந்தையின் பிறந்த நாளுக்காகக் கிராமத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, சகோதரியின் கடையில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட உறவினரான தனுஷ் என்பவரை இளங்கோவன் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த தனுஷ் நள்ளிரவு வீடு புகுந்து இளங்கோவைக் கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
இதில், இளங்கோவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.