தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் திராவிடக் கழகத்தின் முன்னாள் மாணவர் அணி நகரச் செயலாளரைக் கைது செய்யக் கோரி இந்து அமைப்பினர் ஊர்வலமாகச் சென்று காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.
சத்தீஸ்கரில் இரண்டு கிறிஸ்துவ பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடக் கழகத்தின் முன்னாள் மாணவர் அணி நகரச் செயலாளர் ரமேஷ், இந்துக்களைத் தரம் தாழ்த்தி பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைக் கண்டித்து, இந்து அமைப்பினர் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாகச் சென்று கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திராவிட கழகத்தைத் தடை செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.