சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட மின் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனாம்பேட்டையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலான ஹயாட் ரீஜென்சியில் நள்ளிரவு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
9வது மாடியில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அப்பகுதி புகைமூட்டமாகக் காணப்பட்டது. உடனடியாக உணவகத்தில் தங்கியிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்துக் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.