உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலைகள் சேதமடைந்த நிலையில் நிலச்சரிவில் கார் ஒன்று சிக்கி கொண்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.