தமிழக மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால் அதற்கு மிகவும் வருந்துவதாக, கிங்டம் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி இருக்கம் கிங்டம் படத்தில், இலங்கைத் தமிழர்களைத் தவறாகச் சித்தரிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், படத்தைத் தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என, பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்தின் கதை முற்றிலும் கற்பனையானது எனவும், தமிழக மக்களின் உணர்வுகளை தாங்கள் மிகவும் மதிப்பதாகவும், உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால் அதற்கு மிகவும் வருந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.