இமாச்சலப் பிரதேசத்தில் கின்னர் கைலாஷ் யாத்திரையின் போது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்
. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கின்னர் பகுதியில் உள்ள கைலாஷ் மலைக்கு ஏராளமானோர் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
அவ்வாறு யாத்திரை மேற்கொண்ட யாத்திரிகர்களில் 413 பேர் டாங்லிங் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை குழுவினர் அனைவரையும் கயிறு கட்டி டிராவர்ஸ் கிராசிங் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.