தேசிய விருது பெற்றதைத் தொடர்ந்து பார்க்கிங் படக்குழுவினர் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர். 2023ம் ஆண்டுக்கான 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழில் சிறந்த படமாக ஹரீஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருது, இந்த படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கருக்கும் வென்றுள்ளனர்.
3 தேசிய விருதுகளை பார்க்கிங் படம் வென்றதால் படக்குழு நேற்று கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடியது. இதில் படத்தில் நடித்த மற்றும் பங்கு பெற்ற அனைவரையும் அழைத்துப் படக்குழு விருந்தளித்தது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.