கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகரின் பேரனுடைய பிணை மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருமங்கலத்தில் காதல் விவகாரத்தில் நித்தின் சாய் என்பவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திமுக பிரமுகரின் பேரனான சந்துரு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து சந்துரு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதன் விசாரணையில் ஆஜரான காவல்துறை தரப்பு, மனுதார் வழக்கின் முக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்பதால் பிணை வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.