1954ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியது தொடர்பான செய்தி நாளிதழை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
ரஷ்யா உடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதால், இந்தியா மீது கூடுதலாக வரிவிதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தானுடன் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் செய்யப்போவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில் 1971ம் ஆண்டு ஆக.,5ம் தேதி வெளியான நாளிதழ் ஒன்றின் நகலை இந்தியா வெளியிட்டு உள்ளது. அதில் பாகிஸ்தானுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி உள்ளது.
எனவும் அது 1954ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்தியம் சார்பில் பகிரப்பட்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.