இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீதான வரி கூடுதலாக 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
மேலும், அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய இறக்குமதி பொருட்கள் மீதான வரியை 25 சதவீதம் கூடுதலாக உயர்த்தி, அதற்கான நிர்வாக ஆணையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கூடுதல் வரி விதிப்பு இந்திய இறக்குமதி பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இன்றிலிருந்து 21 நாட்களில் இந்த வரிகள் அமலுக்கு வரும் எனவும் அமெரிக்க அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வரி உயர்வு இந்திய பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.