இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது நியாயமற்றது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தேச நலனுக்காக எடுக்கும் நடவடிகைக்களுக்காக அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது துரதிருஷ்டவசமானது என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்க குறிவைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர், 140 கோடி மக்களின் எரிசக்தி தேவையை உறுதி செய்யும் நோக்கத்துடன் செயல்படுகிறோம் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது நியாயமற்றது என கூறியுள்ள ரந்தீர் ஜெய்ஸ்வால், தேச நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.