நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுத் தாக்கல் செய்துள்ளது.
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கவினின் காதலி சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித்தை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் மீது குண்டர் சட்டமும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.