சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சாலையில் மருத்துவக் கழிவுகளை மர்மநபர்கள் கொட்டி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் நேதாஜி நகர் நேரு நகர் இணைப்பு சாலை பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் லாரிகளில் கொண்டு வந்து மருத்துவ கழிவுகளைக் கொட்டி செல்வதாகவும், இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உடனடியாக, சம்பவ இடத்தையைப் பார்வையிட்டு மருத்துவக் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.