மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
66 மேட்டுப்பட்டி கிராமத்தில் சின்னக்கண்ணு, ஆயம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து மகள்கள் உள்ளனர்.
இவர்கள் ஐந்து பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த ஆண்டிசாமி என்பவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் 96 சென்ட் நிலத்தை சின்னக்கண்ணு, கிரையம் வாங்கியுள்ளார்.
அங்கு அவர் விவசாயம் செய்து வரும் நிலையில், அந்த நிலத்தைச் சுற்றிலும் ஆண்டிசாமியின் மகன்கள் கம்பி வேலி அமைத்துள்ளனர்.
மேலும், அலங்காநல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ் என்பவரின் சகோதரர் தான் இதற்குப் பின்புலமாக இருந்து, நிலத்தை அபகரித்து கிராவல் மண் அள்ளுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வயதான தம்பதியினர் மற்றும் மகள்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.