இந்தியா மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பால் நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்கா அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து, முதல் கட்டமாக கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முதல் முறையாக அமெரிக்காவிற்கு ஒரு கோடி முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 50 சதவீதம் வரியை அமெரிக்க அரசு அறிவித்தது. இது நாமக்கல் முட்டை ஏற்றுமதியார்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக நாமக்கல்லில் இருந்து அமெரிக்கவிற்கு முட்டை ஏற்றுமதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.