ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உதம்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 18 சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாகப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 15 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.