பணி நிரந்தரம் கோரி 7 நாட்கள் போராட்டம் நடத்தியும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 7வது நாளாகத் தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தேர்தல் வாக்குறுதியில் தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் எனத் தெரிவித்திருந்ததாகத் தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.
ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகள் ஆகியும் தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை என்றும், தூய்மை பணியாளர்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும், தங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.