சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த், பூரண உடல் நலம் பெற வேண்டி திருமங்கலம் ரஜினி கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன் ரஜினிக்குக் கோயில் கட்டினார்.
இந்நிலையில் 50 ஆண்டுக் காலம் திரைத்துறையில் சாதனை படைத்த ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டியும், அவரது திரை உலக பயணத்தைக் கொண்டாடும் விதமாகவும் அவர் நடித்த 171 திரைப்படங்களிலிருந்து 5 ஆயிரம் புகைப்படங்களைச் சேகரித்து கோயிலில் உள்ள அறைகள் முழுவதும் 360 டிகிரி கோணத்தில் ஒட்டியுள்ளனர்.
தொடர்ந்து ரஜினி சிலைக்கு 16 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து, கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபட்டனர்.