திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
திருப்பூரைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த சதீஸ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ப்ரீத்தியின் பூர்வீகச் சொத்து விற்பனையில் கிடைத்த 50 லட்ச ரூபாய் பணத்தைக் கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த ஒரு மாதமாகத் தாய் வீட்டில் மன உளைச்சலிலிருந்த பிரீத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து அவரது உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சதீஸ்வர் மற்றும் அவரது பெற்றோரைக் கைது செய்தால் மட்டுமே உடலைப் பெற்றுக் கொள்வோம் என உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.