அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கை உயர்நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வோம் என வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு ஏழாவது நாளாகப் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை பாமக சமூக நீதி பேரவை வழக்கறிஞர் பாலு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்டமிட்டபடியே வரும் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
ராமதாஸின் பெயரைச் சொல்லி யாரும் அழைப்பதில்லை என்றும், மருத்துவர் அய்யா என்றுதான் அழைக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், யாராவது மருத்துவர் அய்யாவைப் பெயர் சொல்லி அழைத்து இருந்தால் அது தவறு எனவும் பாலு குறிப்பிட்டார்.