சீனாவின் சிச்சுவானில் இளம்பெண்ணைப் பல பெண்கள் துன்புறுத்தியதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர்.
சிச்சுவானின் ஜியாங்யூவில் கடந்த 3ஆம் தேதி ஆளில்லா கட்டடத்தில் பல இளம்பெண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை அடித்து அவமானப்படுத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக ஏராளமானோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்குக் குவிக்கப்பட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.