ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை குறித்த செய்தி மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பேசிய அவர்,ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்கும் சிறப்பு வாய்ந்த நீண்ட கால உறவு உள்ளதாக தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மையை மிகவும் மதிக்கிறோம் என்றும், உயர்மட்ட ஈடுபாடுகள் மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
புதினின் இந்திய வருகை அறிந்து மிகவும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைகிறோம் என்றும், வருகைக்கான தேதி இறுதி செய்யப்பட்டுள்ளதாக நினைக்கிறேன் என்றும் அஜித் தோவல் கூறினார்.