நெல்லையில் வரும் 17-ஆம் தேதி நடைபெறும் பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரில் ஒருவர் பங்கேற்க உள்ளதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நெல்லையில் பேட்டியளித்த அவர், தேர்தலை எதிர்கொள்ள முழு அளவில் பாஜக தயாராகி வருவதாகவும், கட்சி தொண்டர்கள் எழுச்சியுடன் இருப்பதாகவும் கூறினார்.
மேலும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய மாபெரும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் வரும் 17-ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் என்று கூறிய அவர், இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரில் ஒருவர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, கொங்கு மண்டலம், திருச்சி, சென்னை என அடுத்தடுத்து கூட்டம் நடத்தப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.