கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு அருகே அரசுப்பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற அரசு பேருந்து சின்னாறு எனும் இடத்தில் பழுதாகி நின்றது. இதையடுத்து, பயணிகள் இறக்கவிடப்பட்டததால், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் திருச்சியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசுப்பேருந்து டயர் பஞ்சராகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
அரசுப் பேருந்து பழுதாகி நிற்கும் நிலை தொடர் கதையாகி வருவதால், தமிழக அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.