சென்னை அடுத்த குன்றத்தூரில் பட்டா பெயர் மாற்ற செய்ய 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இரண்டாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் ரவிபாரதி இவருக்கு சொந்தமான இடத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக விஏஓ அலுவலகத்தில் மனு அளித்து இருந்தார்.
இதனை விசாரித்த விஏஓ ராபர்ட் ராஜ், பெயர் மாற்றம் செய்ய 80 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இந்நிலையில், கொழுமனிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இருந்த வி.ஏ.ஓ. ராபர்ட் ராஜ் லஞ்ச பணத்தை வாங்க ஆர்வமுடன் வந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிப்பட்டார்.