விருதுநகரில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் அரசு நிர்ணயித்த விலையைவிடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்களின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும் வழங்கப்பட வேண்டும் என அரசு விலை நிர்ணயித்துள்ள நிலையில், விருதுநகரில் உள்ள அம்மா உணவகத்தில் அனைத்து உணவிற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இங்கு மதிய உணவு சாப்பிடச் சென்ற நபர் ஒருவரிடம் ஊழியர்கள் கூடுதலாக பத்து ரூபாய் பெற்றுள்ளனர். இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய அந்த நபரிடம் உணவக ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.