உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் தராலி கிராமத்தில் நடந்து வரும் பேரிடர் மீட்புப் பணியின் ஒரு பகுதியாக, இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையினர் நிலச்சரிவில் சிக்கிய 44 பேரை பத்திரமாக மீட்டனர்.
தராலி பகுதியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம், இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை, தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.