சேலம் கோட்டை மாரியம்மன், முதன் முறையாகத் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா கடந்த மாதம் 24 ஆம் தேதி வெகு விமரிசையாகத் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் கோயிலில் பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் முதன் முறையாக அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.