காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் பகுதியில் பெரும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் சேதமடைந்த மின்கம்பங்களைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் கிராமத்தில் உள்ள 9-வது வார்டு பகுதிகளில் மின்கம்பங்கள் 2 ஆண்டுகளாகச் சேதமடைந்த நிலையில் உள்ளது.
சிமெண்ட் பூச்சு பெயர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு காணப்படுகிறது.எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.