திமுக கூட்டணியை வீழ்த்த வலுவான கூட்டணி மிக முக்கியம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழக அரசியலிலும், ஆட்சியிலும் மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் விரும்புவதாகவும், அந்த மாற்றத்தை அதிமுகவால் மட்டுமே தர முடியும் என்று மக்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆளும் திமுக, தங்கள் பண பலத்தைப் பயன்படுத்தி கட்சிகளை அடிமைப்படுத்தித் தேர்தலைச் சந்திப்பதாக விமர்சித்த அவர், கூட்டணி இல்லாமல் போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் தயாரா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
திமுகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி மிக முக்கியம் என்று தெரிவித்தார்.