செங்கல்பட்டு மாவட்டம் திருவஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வரும் மக்களிடம் தலா 100 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருவஞ்சேரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் தாம்பரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டார்.
அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் நம்பிக்கையில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
ஆனால் இலவசம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த முகாமில் தலா நூறு ரூபாய் விதம் வசூலிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.