வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் முற்றிலும் சேதம் அடைந்தது.
அம்முண்டி கிராமத்தில் விவசாய நிலங்களுக்குச் செல்வதற்காக ஏதுவாக, பாண்டியன் மடுவு கால்வாய் மீது தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நள்ளிரவில் பெய்த கனமழையால் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்தது.
சுமார் 300 ஏக்கர் விளை நிலங்களுக்குச் செல்லும் பாதை தடைப்பட்டதால், விவசாயிகள் அவதி அடைந்தனர்.