தெலங்கானாவில் முலுகு – வாராங்கல் நெடுஞ்சாலையில் பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
முலுகு மாவட்டம் மல்லம்பள்ளி அருகே உள்ள இந்த நெடுஞ்சாலையில் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இதனால் பழைய பாலத்தின் அருகே ஜேசிபி மூலம் தோண்டி மண் அள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நெடுஞ்சாலையில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.