சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோயில் ஆடித் திருவிழாவையொட்டி வண்டி வேடிக்கை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
120 ஆண்டுகளுக்கும் மேலாக வண்டி வேடிக்கை நிகழ்ச்சி புகழ்பெற்று விளங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான வண்டி வேடிக்கை நிகழ்வு நேற்று நடைபெற்றது.
கண்ணைக் கவரும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விண்ணுலகக் கடவுள் சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன்,பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, வேடம் அணிந்தவர்கள், வண்டியில் ஊர்வலமாகச் வந்து பொதுமக்களுக்கு ஆசி வழங்கினர்.