டெல்லியில் பார்க்கிங் தொடர்பான தகராறில் காலா பட நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் ஆசிப் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் ஜங்புரா போகல் என்ற இடத்தில் நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் ஆசிப் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டின் வாசலில் பைக்கை நிறுத்துவது தொடர்பாக சிலருடன் ஏற்பட்ட தகராறில் அந்த நபர்கள் ஆசிப்பை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ஆசிப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆசிப் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.