மரக்காணம் முதல் புதுச்சேரி வரை 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நாடு முழுவதும் 175 தொழில்நுட்ப கல்லூரிகள், 100 பாலிடெக்னிக் கல்லூரிகளை தரம் உயர்த்த 4,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பல்துறை கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியியல் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கான திட்டத்துக்காக 4,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிரதம மந்திரி உஜ்வலா யோஜனா திட்ட செயல்பாட்டுக்கு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு சிறப்பு மேம்பாட்டுத் தொகுப்புகளுக்கான மத்திய துறை திட்டத்தின் கீழ் 4,250 கோடி ரூபாய் ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், மரக்காணம் மற்றும் புதுச்சேரி இடையே 2157 கோடி ரூபாய் செலவில் நான்கு வழி நெடுஞ்சாலை அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.