சேலம் அம்மாபேட்டையில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற வண்டி வேடிக்கையை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.
ஆடி மாத திருவிழாவையொட்டி சேலத்தில் புகழ்பெற்ற வண்டி வேடிக்கை, குகை, அம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களில் விமர்சையாக நடைபெறும். அம்மாபேட்டை பகுதியில் நடைபெற்ற வண்டி வேடிக்கை வழக்கமான உற்சாகத்தோடு களைகட்டியது.
விஷ்ணு பெருமானின் தசாவதாரம், சிவபெருமானின் கணபதி மோட்சம், பிரம்மாண்டமான நரசிம்ம அவதாரம் என பத்துக்கும் மேற்பட்ட அலங்கார வாகனங்கள் பார்வையாளர் கண்களுக்கு விருந்து படைத்தன.