திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சந்தோஷ் நகரில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையறிந்த பொதுமக்கள், மாமன்ற உறுப்பினருக்கு தகவலளித்ததோடு, சம்பவ இடத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உரிய அனுமதி பெற்று கடை அமைக்க வேண்டும் எனவும், கடையை காலி செய்யவும் அறிவுறுத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.