மரக்காணம்-புதுச்சேரி இடையே ₹ 2,157 கோடி மதிப்பிலான நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு, பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், போக்குவரத்தை மேம்படுத்துவதோடு, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சமூகப் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் சுமார் 8 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளையும், 10 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வல்லதே மரக்காணம்-புதுச்சேரி நான்கு வழிச்சாலை திட்டம் எனதெரிவித்தார்.
இத்தகைய உன்னதத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.