உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் விரைவில் நலம்பெற வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இல.கணேசன் முழுமையாகவும், விரைவாகவும் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அர்ப்பணிப்பு, தேசபக்தி, உறுதிப்பாட்டின் உருவகமான இல.கணேசன் நல்ல ஆரோக்கியத்துடன் காண காத்திருக்கிறோம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.