எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருவதாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைக் கண்டித்த மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருவதாக ஆதங்கம் தெரிவித்தார்.
நடப்பு கூட்டத்தொடரில் 56 மணி நேரம் 49 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.