பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி இங்கிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
கடந்த மாதம் 23-ந்தேதி மான்செஸ்டரில் உள்ள வணிக வளாகத்தில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது. பாகிஸ்தான் வம்சாவளி பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.