நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்களைச் செலுத்தக் கொண்டு வரப்பட்ட ஃபாஸ்டேக் முறையில் ஆகஸ்ட் 15 முதல் ஆண்டு சந்தா முறை அறிமுகம் செய்யப்படுகிறது.
ஏற்கனவே இருக்கும் ஃபாஸ்டேக் மூலமாகவே ஆண்டு சந்தா பெறலாம் என்றும் புதிய டேக் வாங்க வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா கட்டணம் 3 ஆயிரம் ரூபாய் என்றும் ஆகஸ்ட் 15 முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. ராஜ்மார்க் யாத்ரா செயலி, என்எச்ஏஐ அல்லது எம்ஓஆர்டிஎச் வலைத்தளங்களில் ஆண்டு சந்தா செலுத்தும் வசதி உள்ளது.