மயிலாடுதுறையில் ஸ்ரீ மகா வீரமாகாளியம்மன் கோயிலில் 125 ஆம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
காவேரி துலா கட்ட கரையில் இருந்து, விரதமிருந்த பக்தர்கள் காப்புக் கட்டிக்கொண்டு சிறப்புப் பூஜைகளுடன், மேள வாத்தியங்கள் முழங்கப் பால்குடம் எடுத்து கோயிலை அடைந்தனர்.
12 அடி அலகு குத்தியும் , கூண்டு காவடிகள் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.