திருவண்ணாமலை அருகே நாயின் தலையில் மாட்டிய பிளாஸ்டிக் பாட்டிலை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி எடுத்தனர்.
வந்தவாசியில் நாயின் தலையில் பிளாஸ்டிக் பாட்டில் மாட்டி கொண்டது. தண்ணீர் மற்றும் உணவு சாப்பிட முடியாமல் தவித்த நாய் குறித்து தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி பாட்டிலை வெளியே எடுத்து நாயைக் காப்பாற்றினர்.