திருப்பூரில் நவீன பின்னலாடை இயந்திர கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருப்பூரில் ஆண்டுக்கு70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தை பனியன் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நிலையில், எந்திரத்தின் பங்கு என்பது முக்கிய தேவையாக இருந்து வருகிறது.
இயந்திரத்தின் செயல்பாடுகளை அனைவரும் அறிந்து கொள்ளும் நோக்கில் திருப்பூரில் இயந்திர கண்காட்சி தொடங்கி உள்ளது.
இதில் இந்தியா முழுவதும் இருந்து முன்னணி நிறுவனங்கள் தங்களின் இயந்திரத்தைக் காட்சிப்படுத்தின. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் மேக்இன் இந்தியா திட்டம் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களும் இடம்பெற்றிருந்தன.
இதில் மகேஷ்வரன் என்பவர் தனது நிறுவனம் சார்பில் கஸ்டமைஸ்டு ஏஐ இயந்திரத்தைக் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த இயந்திரம் பொருட்களை இலகுவாகக் கையாள்வதுடன், சிதறி இருக்கும் பொருட்களை அழகாக அடுக்கி வைத்தது பார்வையாளர்களைக் கவர்ந்தது.