கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் 12 ஆயிரம் பேரின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகியுள்ளது என அதிமுக எம்எல்ஏ தாமோதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான தாமோதரன், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தாமோதரன், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் சுமார் 12 ஆயிரம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவாகியுள்ளது எனத் தெரிவித்தார்.
இதே போன்று அனைத்து தொகுதிகளிலும் நடந்திருப்பதற்கான வாய்ப்புள்ளதால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், வெள்ளளூர் குப்பைக் கிடங்கால் தண்ணீர் மாசடைவதால் பெரும் போராட்டத்தைச் சந்திக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.