ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்து இலங்கைத் தமிழர் முகாம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி சாகரில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம் குடியிருப்பு பகுதியில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மக்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அவதூறாகப் பேசியதாகக் கூறி இலங்கைத் தமிழர் முகாம் மக்கள், கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.