சீனாவில் பெண் பயணியை ஏற்றிச் சென்ற ஓட்டுநரில்லா தானியங்கி கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக ஓட்டுநரில்லா தானியங்கி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஓட்டுநரில்லாமல் இயங்கும் இந்த தானியங்கி கார் தான் தற்போது சீனாவில் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பயணியை ஏற்றிச் சென்ற இந்த தானியங்கி கார், அங்கு வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகையைக் கண்டு கொள்ளாமல் சென்று பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டாலும் தானியங்கி கார்களில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.