இமாச்சலப்பிரதேச மாநிலம் சம்பாவில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
சம்பா மாவட்டத்தில் உள்ள புல்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான ராஜேஷ் குமார் குடும்பத்தினர், உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிந்தனர்.
தீசா சான்வாஸ் கிராமம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள 500 மீட்டர் ஆழப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.